Plant Wiki

Plant Wiki › Indian mallow

அபுதிலோன்

Abutilon · Indian mallow

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español

அபுதிலோன்
புகைப்படம்: Indian mallow

அபுதிலோன் (தாவரவியல் பெயர்: Abutilon) என்பது மால்வேசியே (Malvaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 246 பேரினங்களில் ஒன்றாகும். இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் மில்லர் (Miller, Philip (1691-1771)) ஆவார். இவரை 'Mill.' என்று தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1754 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடமானது, பூமியின் வெப்ப வலயம், அயன அயல் மண்டலம் உள்ள நிலப்பகுதிகள் ஆகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை அபுதிலோன், CC BY-SA 4.0.