Plant Wiki › Tropical whiteweed
பூம்புல்
Ageratum conyzoides · Tropical whiteweed
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பூம்புல் (Ageratum conyzoides ) என்பது வெப்பமண்டல அமெரிக்காவை, குறிப்பாக பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இது பல பகுதிகளில் ஒரு ஆக்கிரமிப்பு உயிரனமாக உள்ளது. இது 0.5-1 மீ உயரம்வரை வளரும் செடி ஆகும் இதன் இலைகள் 2-6 செ.மீ நீளத்தில் முட்டை வடிவமானதாக இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை முதல் மெல் ஊதா வரை இருக்கும். அசுத்தமான பகுதிகளில் இதன் வளர்ச்சி காரணமாக வியட்நாமிய மொழியில், இந்த தாவரம் cứt lợn ("பன்றி மலம்" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பூம்புல், CC BY-SA 4.0.