பொன்னாங்காணி
Alternanthera sessilis · Sessile joyweed
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) ஒரு ஈரப்பாங்கான இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். மருத்துவத் தேவைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. சித்த மருத்துவத்தில் இது கொடுப்பார், சீீீீீீதை என குறிப்பிடப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பொன்னாங்காணி, CC BY-SA 4.0.