Plant Wiki

Plant Wiki › Titan arum

டைட்டன் ஆரம்

Amorphophallus titanum · Titan arum

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

டைட்டன் ஆரம்
புகைப்படம்: Titan arum

டைட்டன் ஆரம் (Titan arum) அல்லது அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம் (Amorphophallus titanum) (பண்டைய கிரேக்கம் அமார்ஃபோஸ் என்றால் "உருவாகாத, நடக்காத" என்று பொருளாகும். ஃபாலஸ், டைட்டன் என்பன "பெரிய" என்று பொருள்தரும் சொற்கள்) என்பது உலகின் மிகப்பெரியப் பூக்களைக் கொடுக்கும் கிளையிலாத் தாவரமாகும். (மிகப்பெரிய ஒற்றைப்பூ தரும் தாவரம் இரஃப்லேசியா அர்னால்டி); மிகப்பெரிய பூ தரும் கிளைக்கும் இராச்சியம் தாலிபோட் பனை சார்ந்த காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா ஆகும்). இது இரஃப்லேசியா அர்னால்டியைப் போல தனித்த மலரைத் தருவதில்லை. மாறாக பூந்துணரைத் (Inflorescence) தருகிறது. இந்த மலரின் மணம் அழுகிய விலங்கின் மணத்தினை ஒத்திருக்கும். டைட்டன் ஆரம் பிண மலர் (corpse flower) என்றும் அழைக்கப்படும். இது இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை டைட்டன் ஆரம், CC BY-SA 4.0.