அக்கராகாரம்
Anacyclus pyrethrum · Atlas Daisy
பிற மொழிகள்: English · Español

ஸ்பெயின், அரேபியா, ஜெர்மனி, எகிப்து, கனடா போன்ற நாடுகளிலும் வங்க தேசத்திலும் பயிராகும் இந்த மூலிகைக்கு அக்கார்கரா, ஸ்பானிஷ் பெல்லிடோரி, அக்கரம் எனப் பல்வேறு பெயர்கள் உண்டு. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்கம் போன்ற இடங்களில் இதனை முக்கிய மூலிகையாகப் பயிர் செய்கிறார்கள். அக்கராகாரம் வேர் காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி நன்கு உலர்த்தி, பதப்படுத்தப்பட்டு, மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த நிலையில் உள்ள இந்த வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அக்கராகாரம், CC BY-SA 4.0.