Plant Wiki

Plant Wiki › Creat

நிலவேம்பு

Andrographis paniculata · Creat

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español

நிலவேம்பு
புகைப்படம்: Creat

நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கசப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடிகள் வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கள் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும். கசப்புச் சுவையின் இராசா என இந்த நிலவேம்பு அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படுகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. பாரம்பரியமாக இத் தாவரம் சில நோய்களையும் தொற்றுகளையும் குணமாக்கப் பயன்படுகிறது. இதன் முழுச் செடியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை நிலவேம்பு, CC BY-SA 4.0.