Plant Wiki

Plant Wiki › Soursop

முள்ளு சீதா

Annona muricata · Soursop

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

முள்ளு சீதா
புகைப்படம்: Soursop

முள்ளு சீதா (Graviola அல்லது Soursop) பசுமைமாறாத அகண்ட இலை, பூக்கும் சிறுமரமாகும்.மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா: கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவை இம்மரத்தின் தாயகமாகும். வெப்ப மண்டலப் பகுதியருகேயுள்ள சஹாரா நாடுகளும் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தற்போது வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பமான அனோனேசியே ஆகும். இதன் தாவரவியல் பெயர் அனோனா முயுரிகேட்டா. இதன் பழங்கள் செம்புற்றுப்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றின் புளிப்புத் தன்மை சேர்ந்த சுவையுடையது. இப்பழமானது புளிப்பு மற்றும் சற்று இனிப்பு கலந்த சுவையும் இருப்பதால் புளிப்புபழம் என்று அழைக்கப்படுகிறது. பசுமைமாறா மரம் மிதமான தட்பவெப்பநிலைகளிலும் வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும். பனியை தாங்கி வளராது ஒரு பழமானது தோராயமாக 4 கிலோ எடை கொண்டது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை முள்ளு சீதா, CC BY-SA 4.0.