Plant Wiki

Plant Wiki › Early yellowrocket

பார்பாரியா வெர்னா

Barbarea verna · Early yellowrocket

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

பார்பாரியா வெர்னா
புகைப்படம்: Early yellowrocket

பார்பாரியா வெர்னா (தாவரவியல் பெயர்: Barbarea verna, ஆங்கிலம்: Land cress, American cress, bank cress, black wood cress, Belle Isle cress, Bermuda cress, poor man's cabbage, early yellowrocket, early wintercress, scurvy cress, creasy greens, upland cress. என்பது இருபருவத் தாவரம் ஆகும். இவ்வினம், பிராசிகாசியே (Brassicaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பாவும், மேற்கு ஆசியா எனவும் கருதப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டு முதல் இங்கிலாந்தில் இத்தாவரத்தின் இலைகள், காய்கறியாக பயன்படுத்த பயிரிடப்படுகிறது. இது 25 - 80 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையது. இதன் பூந்துணர் (raceme) 6 முதல் 25 மலர்களை, தண்டு நுனியில் பெற்றிருக்கும். இது சான்விச், சாலட், பசளி போல சமையலிலும், சூப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பார்பாரியா வெர்னா, CC BY-SA 4.0.