Plant Wiki

Plant Wiki › Bidi Leaf Tree

ஆத்தி

Bauhinia racemosa · Bidi Leaf Tree

பிற மொழிகள்: English · 中文

ஆத்தி
புகைப்படம்: Bidi Leaf Tree

ஆத்தி (Bauhinia racemosa) என்பது சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரிதான சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். மூன்று முதல் ஐந்து மீட்டர் (10–16 அடி) உயரம் வளரக்கூடிய இம்மரம், கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பூக்கக்கூடியது. இம்மரம் தென்கிழக்காசியா, இந்தியத் துணைக்கண்டம், சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆத்தி, CC BY-SA 4.0.