Plant Wiki

Plant Wiki › Red silk cottontree

இலவம்

Bombax ceiba · Red silk cottontree

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இலவம்
புகைப்படம்: Red silk cottontree

இலவம், மலை இலவம், முள் இலவம், காட்டு இலவு (Bombax ceiba) என்பது பாம்பாக்ஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இந்த ஆசிய வெப்பமண்டல மரம் நேரான உயரமான தண்டு கொண்டது, மேலும் அதன் இலைகள் குளிர்காலத்தில் உதிர்ந்துவிடும். புதிய இலைகள் தோன்றுவதற்கு முன்பு வசந்த காலத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட சிவப்பு நிறப் பூக்கள் தோன்றும். பின்னர் இதில் காய்கள் உருவாகின்றன. அது முற்றும்போது, ​​உள்ளே பருத்தியைப் போன்ற வெள்ளை இழைகளைக் கொண்டிருக்கும். விலங்குகளிடதிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இம்மரத்தின் தண்டில் முட்கள் காணப்படும். இம்மரத்தின் தடித்த தண்டு மரக்கட்டைக்கு பயனுள்ளதாக இருப்பதுபோல் தோன்றினாலும், இந்த மரம் மிகவும் மென்மையாக இருப்பதால் அதிகப் பயன் தருவதில்லை. இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக் காத்திருந்தால் கிளி ஏமாந்துபோகும். இதனால் இலவு காத்த கிளி போல என்னும் மரபுத்தொடர் உருவாயிற்று.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை இலவம், CC BY-SA 4.0.