Plant Wiki

Plant Wiki › Borassus palm

பனை

Borassus · Borassus palm

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

பனை
புகைப்படம்: Borassus palm

பனை (தாவர வகைப்பாட்டியல்: Borassus, ஆங்கிலம்:Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த, தாவரப் பேரினம் ஆகும். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமென கருதப்படுகிறது. அதன் வாழ்நாள், மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள், ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பனை, CC BY-SA 4.0.