Plant Wiki

Plant Wiki › Toddy palm

ஆசியப் பனை

Borassus flabellifer · Toddy palm

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆசியப் பனை
புகைப்படம்: Toddy palm

ஆசியப் பனை என்பது, தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி என்பன உள்ளிட்ட தென்னாசியா, தென்கிழக்காசியா போன்ற ஆசியப் பகுதிகளிலும், சில ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் காணப்படும் பனைச் சிற்றினம். இச்சிற்றினப்பெயரே பேரினம்,குடும்பம் ஆகியவற்றுக்கும் தமிழில் வழங்கப்படுகிறது போராசசு பளாபெல்லிபர் (Borassus flabellifer) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இச்சிற்றினத்தைக் கள்ளுப் பனை, சர்க்கரைப் பனை, கம்போடியப் பனை ஆகிய பெயர்களாலும் அழைக்கின்றனர். இம்மரத்தின் இலை முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் மிக்க பயனுள்ளதாக விளங்குகின்றது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பகுதிகளிலும், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடங்கி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படும் இது இம்மாநிலத்தின் தாவரம் எனவும் அறியப்படுகிறது. இலங்கையிலும், பனைகள் தமிழர் வாழுமிடங்களான வடபகுதியிலேயே மிகுந்து வளர்கின்றன. 1960களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி, இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்தனவாம்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆசியப் பனை, CC BY-SA 4.0.