Plant Wiki

Plant Wiki › Indian frankincense

பரங்கி சாம்பிராணி

Boswellia serrata · Indian frankincense

பிற மொழிகள்: English · 中文 · Español

பரங்கி சாம்பிராணி
புகைப்படம்: Indian frankincense

பாசுவெல்லியா செரேட்டா (Boswellia serrata) என்னும் தாவரப்பெயர் கொண்ட பரங்கி சாம்பிராணி ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ஒரு வகை மரமாகும். இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகள் இதன் தாயகமாகும். இதனை பால் சாம்பிராணி , குந்துருக்கம், குந்தலிங்கம், நறும்பிசின், குமைஞ்சான், தூபவர்க்கம் என்றும் கூறலாம். பரங்கி சாம்பிராணிக்கு இந்தியன் ஃப்ரன்கின்சென்ஸ் என்ற பெயரும் உண்டு. பர்செராவே குடும்பத்தைச் சார்ந்தது. இது உலகின் பழமையான ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை தீர்வாகும். மூட்டு முடக்குவாதத்திற்கு அருமருந்தாக கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பரங்கி சாம்பிராணி, CC BY-SA 4.0.