பிராசிகா ஓலரேசியா
Brassica oleracea · Cabbage
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிராசிகா ஓலரேசியா (வகைப்பாட்டியல்:Brassica oleracea) என்ற தாவரயினம், பிராசிகேசியே (Brassicaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதில் முட்டைக்கோஸ், பிரோக்கோலி, காலிஃபிளவர், பரட்டைக்கீரை, பிரசல்சு முளைகள், கொலார்ட் கீரைகள், சவோய் முட்டைக்கோசு, பசம்நூல்கோல் மற்றும் கைலான் போன்ற காய்கறிகளாகப் பயன்படுத்தப்படும் பல பொதுவான பயிர் சாகுபடிகள், இவ்வகையின் கீழ் அமைகிறது. இதன் பயிரிடப்படாத வடிவம், காட்டு முட்டைக்கோசு ஆகும். இது கடலோர தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் தெற்கு, மேற்குக் கடலோரப் பகுதிகளுக்கு உரிய தாவரயினமாகும். அவ்வாழிடத்தின் உப்பு, சுண்ணாம்பு சத்தினைத் தாங்கி வளர்வதால்,கடினமான தாவரமாகத் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக, ஆங்கில கால்வாயின் இருபுறமும் உள்ள சுண்ணாம்பு பாறைகள் அதிகமுள்ள வாழிடமாக உள்ளன. காட்டின பி. ஒலரேசியா (B. oleracea) 3-7 அடி உயரமான இருபதாண்டு தாவரமாகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பிராசிகா ஓலரேசியா, CC BY-SA 4.0.