Plant Wiki

Plant Wiki › Bok choy

போக் சொய்

Brassica rapa subsp. chinensis · Bok choy

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

போக் சொய்
புகைப்படம்: Bok choy

போக் சொய்(Bok choy (அமெரிக்க ஆங்கிலம், கனடிய ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம்), pak choi; பிரித்தானிய ஆங்கிலம் அல்லது pok choi; Brassica rapa subsp. chinensis) என்பது பிராசிகா இராபா வகைகளில் ஒன்றாகும். இது சீன முட்டைகோசு உணவாக பயன்படுகிறது. இவ்வகையில் தாவரத்தின் தலைப்பகுதி இருக்காது. பச்சை இலை மடல்களும், அடிப்பாகத்தில் மிருதுவான உருண்டை தண்டும் அமைந்து இருக்கும். கடுகுக் கீரையை போன்று தோற்றமளிக்கும். இதன் மணம், சுவையும், பசளியையும், நீர் கசுகொட்டையையும் ஒத்து இருக்கும். ஆனால் கொஞ்சம் இனிப்பாகவும், வெகு குறைவான மிளகுக் காரச்சுவையுடனும் இருக்கும். இதன் பச்சை இலைகள், அடிப்புற தண்டினை விட சுவை மிகுந்து காணப்படும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை போக் சொய், CC BY-SA 4.0.