Plant Wiki

Plant Wiki › Choy sum

பூக்கும் சீன இலைக்கோசு

Brassica rapa var. parachinensis · Choy sum

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia

பூக்கும் சீன இலைக்கோசு
புகைப்படம்: Choy sum

பூக்கும் சீன இலைக்கோசு (Choy sum அல்லது choi sum, choi sam, கண்டோனீயம்; cai xin, caixin, yu choy, மாண்டரின்: 油菜, Chinese flowering cabbage.) என்பது இலைக்காய்கறி ஆகும். இது பெரும்பான்மையான சீனச் சமையலில் பயன்படுகிறது. இத்தாவரத்தின் பேரினம் பிராசிகா, குடும்பம் பிராசிகேசியே ஆகும். பிராசிகா இராபா என்ற இனத்தில் வகைகள் பல உள்ளன. அவற்றில் ஒருவகை parachinensis அல்லது போக் சொய் var. parachinensis ஆகும். கண்டோனீயம் (சீனம்: 菜心) மொழியில் இதன் பொருள், "காய்கறிகளின் இதயம்" என்பதாகும். இந்த இனத்தில் தனித்துவமான மஞ்சள் நிற மலர்கள் பூக்கின்றன. ஒவ்வொரு பூவிலும் நான்கு மஞ்சள் முட்டை வடிவ பூவிதழ்கள், ஆறு ஆண் உறுப்புகள், அடர் பச்சை நிறமுள்ள சினையகமும் உள்ளன. ஒவ்வொரு விதையுறையிலும் 4 முதல் 46 விதைகள் உள்ளன. இதன் வேர்த்தொகுதி 10 முதல் 40 cm (4 முதல் 16 அங்) வரை உள்ளது. ஏழு முதல் எட்டு இலைகள் உள்ள போது பூக்கள் பூக்கின்றன. 12 cm (4+1⁄2 அங்) ஆழம் வரை வேர்கள் உள்ளன. இது ஆண்டுத் தாவரம் ஆகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பூக்கும் சீன இலைக்கோசு, CC BY-SA 4.0.