Plant Wiki

Plant Wiki › Komatsuna

கோமட்சுனா

Brassica rapa var. perviridis · Komatsuna

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español

கோமட்சுனா
புகைப்படம்: Komatsuna

கோமட்சுனா (தாவரவியல் பெயர்: Brassica rapa var. perviridis, Komatsuna (小松菜(コマツナ)), ஆங்கிலம்: Japanese mustard spinach) என்பது இலைக் காய்கறியாகும். இது பிராசிகா இராபாவின் தாவரப் பல்வகைமைகளில் ஒன்றாகும். இக்காய்கறி யப்பான், தைவான் ஆகிய நாடுகளில் விற்பனைக்காக அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனை பலவிதமான உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். சில ஆசிய நாடுகளில் இது தீவனப் பயிராகவும் பயன்படுத்தப் படுகிறது. நன்கு வளர்ந்த இத்தாவரம் அடர் பச்சையாகவும், அதன் தண்டுகள் இளம்பச்சையாகவும் இருக்கும். இதன் தண்டு ஏறத்தாழ 30 செ. மீ. நீளமாகவும், 18 செ. மீ. அகலமாகவும் இருக்கும். இதன் வளர்நிலை காலங்கள் இளவேனிற்காலம், இலையுதிர்காலம் ஆகும். தற்போது இதனை பசுமைக் குடில்களில் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றனர். இக்கீரையில் கல்சியம், உயிர்ச்சத்து ஏ, உயிர்ச்சத்து சி அதிகம் உள்ளது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கோமட்சுனா, CC BY-SA 4.0.