புரசு
Butea monosperma · Bengal kino
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

புரசு, பலாசு, பொரசு, புரசை, முருக்கன், புனமுருக்கு (butea monosperma) என்ற பெயர்களால் அழைக்கப்படுவது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளைச் சேர்ந்த பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது ஒன்பதாம் நூற்றாண்டுவரை பலாசம் என்றே அழைக்கப்பட்டது. இம்மரம் மிக வலிமையானது, கடும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தலமரமாக உள்ளது. இதனை கிளி மூக்கு பூ என்றும் அழைப்பார்கள். இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான சார்க்கண்ட்டின் மாநில மலராக இப்பூ விளங்குகிறது. இந்த மரம் வங்காளதேசம், இந்தியா, நேபாளம், பாக்கித்தான், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மலேசியா, மேற்கு இந்தோனேசியா முழுவதும் காணப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை புரசு, CC BY-SA 4.0.