எருக்கு
Calotropis · Giant Milkweeds
பிற மொழிகள்: English · Español

எருக்கன் அல்லது எருக்கு (Calotropis) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது வெள்ளெருக்கு ஆகும். எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் பூசிக்கப்படுகிறது. திருக்கானாட்டுமுள்ளூரில் வெள்ளெருக்குடன் அத்தியும் தலமரமாக உள்ளது. எருக்கன் செடிகள் கடும் வறட்சியிலும் வளரும் தன்மை கொண்டவை. இச் செடிகளில் பல வகைகள் உண்டு, என்றாலும் மிகுதியாகக் காணப்படுவது கத்தரிபூ நிற (நீல) எருக்கம் செடி. அதற்கடுத்து வெள்ளெருக்கு செடி ஆகும். விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை எருக்கு, CC BY-SA 4.0.