Plant Wiki

Plant Wiki › Hemp

கஞ்சா

Cannabis · Hemp

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

கஞ்சா
புகைப்படம்: Hemp

கஞ்சா () (Cannabis) (; Cán-na-bis) கேனபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால் இது மூன்று முதன்மையான சிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு இண்டிக்கா (Cannabis indica), மற்றும் கனாபிசு ருடேராலிசு (Cannabis ruderalis). இந்த மூன்றும் C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம். இந்தப் பேரினம் மத்திய ஆசியாவையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் தாய் நாடுகளாகக் கொண்டவை. நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் உளத்தூண்டல் கூறான டெட்ராஹைட்ரோகனாபினால் (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கஞ்சா, CC BY-SA 4.0.