Plant Wiki

Plant Wiki › Sea grapes

கடல் திராட்சை

Caulerpa lentillifera · Sea grapes

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கடல் திராட்சை
புகைப்படம்: Sea grapes

கடல் திராட்சை (Caulerpa lentillifera) இந்தியப் பசிபிக் கடலோரப் பகுதியில் காணப்படும் ஒருவகை பச்சைப்பசிய கடல்பாசி ஆகும். இதன் தாவரவியல் பெயர் 'கவுலெர்ப்பாலெண்டில்லிஃபெரா' என்பதாகும். அதன் மென்மையான, சதைப்பற்றுள்ள அமைப்பு காரணமாக இந்த கடற்பாசி சாப்பிடக்கூடிய கவுலெர்ப்பா வகை இனங்களுள் ஒன்றாகும். இந்த வகைக்கடற்பாசி பிலிப்பைன்ஸ்நாட்டில் பயிரிடப்பட்டு சாப்பிடப்படுவதால் இது இலாட்டோ, குசோ, ஆந்திரோசெப் போன்ற பல்வேறு பெயர்களில் உள்ளூர் மொழியில் அறியப்படுகிறது; மலேசிய நாட்டில் உள்ள சபா மாநிலத்தில், அது இலாட்டோக்' என அழைக்கப்படுகிறது; ஜப்பானில் உள்ள, 'ஒகினாவா'வில், இது "உமி-புடோ" (海 ど ど う) அதாவது "கடல் திராட்சை" " என்று அழைக்கப்படுகிறது, இது ஆங்கிலத்தில் பச்சைக் கேவியர் அல்லது கடல் திராட்சை எனப்படுகிறது. இது வடிகுழல் வகைப் பெரும்பாசியாகும். இதில் ஒரு பெரிய உயிர்க்கலத்தில் இருந்து பல்கரு உருவாகும் பாசியாகும். இது 30 செமீ நீளத்துக்கு வளர்கிறது. இலைகள் மட்டுமன்றி, இதன் குமிழ்ப் பகுதிகள் வாயில் வெடித்து நல்ல உமாமிவகை மணத்தைத் தருகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கடல் திராட்சை, CC BY-SA 4.0.