இலவம் பஞ்சு மரம்
Ceiba pentandra · Kapok
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இலவம்பஞ்சு மரம் (Ceiba pentandra) என்பது மால்வேல்ஸ் வரிசையையும் மால்வேசியே குடும்பத்தையும் (முன்னர் இது பாம்பாகேசி குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தது) சார்ந்த ஒரு வெப்பமண்டல மரமாகும். இது மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, கரிபியன், தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. சில ஆய்வாளர்கள் இது மேற்கு மற்றும் நடு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்டது எனக் கருதுகின்றனர். தெற்கு மற்றும் தென்கிழக்காசியா உள்ளிட்ட பிற வெப்பமண்டலப் பகுதிகளிலும் இது பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு, அங்கு பயிரிடப்படுகிறது. இந்த மரமும், அதன் காய்களில் இருந்து பெறப்படும் பஞ்சு பொதுவாக ஆங்கிலத்தில் கபோக் என்று அழைக்கப்படுகிறது. இது மலாய் மொழியிலிருந்து பெறப்பட்ட பெயராகும். இது முதலில் வெப்பமண்டல ஆசியாவைச் சேர்ந்த முள் இலவம் தொடர்புடைய இனங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. எசுபானிய மொழி பேசும் நாடுகளில் இந்த மரம் பொதுவாக "செய்பா" என்றும் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளில் ஃபுரோகேர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரம் பருத்தி போன்ற பஞ்சுக்காக குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படுகிறது, மேலும் இது ஜாவா பருத்தி, ஜாவா கபோக், பட்டு-பருத்தி, சமாமா என்றும் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை இலவம் பஞ்சு மரம், CC BY-SA 4.0.