Plant Wiki

Plant Wiki › Fat-hen

சக்கரவர்த்திக் கீரை

Chenopodium album · Fat-hen

பிற மொழிகள்: English · 한국어 · Español

சக்கரவர்த்திக் கீரை
புகைப்படம்: Fat-hen

செனோபோடியம் ஆல்பம் என்ற தாவரவியல் பெயராலும் சக்கரவர்த்திக் கீரை என்று பொதுப்பெயரிலும் அழைக்கப்படும் இந்த தாவரம், செனோபோடியம் பேரினத்தில் வேகமாக வளரும் வருடாந்திர தாவரமாகும். உலகின் சில பகுதிகளில் பயிரிடப்பட்டு, உணவாக பயன்படுத்தப்பட்டாலும் இந்த தாவரம் பெரும்பாலான இடங்களில் களையாக கருதப்படுகிறது. பொதுவான பெயர்களில் கண்ணாடிக் கீரை, சிக்லிசக்கோலி, ஆங்கிலத்தில் பிக் வீட்(Pig Weed ) கூஸ் புட் (Goose Foot), காட்டு கீரை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலப் பெயர்கள் இந்த செனோபோடியம் பேரினத்தின் பிற இனங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக இது பெரும்பாலும் வெள்ளை கூஸ்ஃபூட் என்றும் வேறுபடுத்தி அழைக்கப்படுகிறது. செனோபோடியம் ஆல்பம் வட இந்தியாவின் பல பகுதிகளிலும், நேபாளத்திலும் பதுவா எனப்படும் கீரை உணவுப் பயிராக பரவலாக பயிரிடப்பட்டு நுகரப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை சக்கரவர்த்திக் கீரை, CC BY-SA 4.0.