காசினிக்கீரை
Cichorium intybus · Chicory
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிக்கரி (காசினி) என்பது ஒருவகைச் செடி ஆகும். இதன் தாவரப் பெயர் சிகோரியம் இண்டிபஸ் ஆகும். சிக்கரி செடியின் வேர் முள்ளங்கி போன்றிருக்கும். சிக்கரி செடியின் வேரைக் காயவைத்து, வறுத்துப் பொடியாக்குவதன் மூலம் பெறுவது சிக்கரித் தூள் ஆகும். காப்பி சுவையாக இருக்க, காப்பிக் கொட்டைத் தூளுடன், சிக்கரித் தூளை 80க்கு 20 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் சிக்கரி செடி பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசம், பீகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை காசினிக்கீரை, CC BY-SA 4.0.