Plant Wiki

Plant Wiki › Gimpi Gimpi

டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ்

Dendrocnide moroides · Gimpi Gimpi

பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español

டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ்
புகைப்படம்: Gimpi Gimpi

டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ் (Dendrocnide moroides, பொதுவாக ஆஸ்திரேலியாவில் கொட்டு மரம், கொட்டு புதர் அல்லது ஜிம்பி-ஜிம்பி என அழைக்கப்படுகிறது) என்பது மேலேசியா மற்றும் ஆத்திரேலியாவின் மழைக்காடு பகுதிகளில் காணப்படும் ஒரு தாவரம் ஆகும். இதன் தொட்டால் எரிச்சலூட்டும் பண்புக்காக அறியப்படுகிறது. இது அர்ட்டிகேசீ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இந்த செடியில் உள்ள முட்கள் பட்டால் மிகவும் வலி ஏற்படும். இந்த வலி நீண்ட காலம் தொடரும். இதற்கு உள்ள பெயர்களில் ஒன்றான ஜிம்பி-ஜிம்பி என்ற பெயர் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் பழங்குடி குப்பி மக்களின் மொழியிலிருந்து வந்தது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை டெண்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ், CC BY-SA 4.0.