Plant Wiki › Eastern daisy fleabane
எரிகெரான் அன்னூசு
Erigeron annuus · Eastern daisy fleabane
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español

எரிகெரான் அன்னூசு (தாவரவியல் வகைப்பாடு: Erigeron annuus) என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 1702 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “எரிகெரான்” பேரினத்தில், 449 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1804 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. எனினும், பிற கண்டங்களிலும் அறிமுகத் தாவரமாக உள்ளது. இத்தாவரம் சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீரிழிவு, வயிற்றுக் கோளாறுகள், சில கல்லீரல் தொற்றுகளுக்கு பயன்படுத்தப் படுவதால், இந்நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை எரிகெரான் அன்னூசு, CC BY-SA 4.0.