அசாய் பனை
Euterpe oleracea · Açaí palm
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அசாய் பனை (açaí palm) () அல்லது அச்சாய் பனை என்பது ஈட்டர்பே ஒலெராசியா குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். பழத்திற்காகவும் மேன்மையான நுங்குக்காவும் பயிரிடப்படும் ஈட்டர்பே பேரினத்தைச் சேர்ந்த பனை மர இனமாகும். 'அழுகின்ற அல்லது தண்ணீர் வெளியேற்றும் பழம்' என்று பொருள்படும் துபியன் வார்த்தையான இவாசா'ய் யின் (ïwasa'i) ஐரோப்பியத் தழுவலிலிருந்து இப்பெயர் வந்ததாகும். சமீப ஆண்டுகளில் அசாய்ய் பழத்துக்கான உலகளாவிய தேவை விரிவடைந்து வருகிறது. அந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டே தற்போது அசாய்ய் பனை பயிரிடப்படுகிறது. இதுனுடன் நெருங்கிய தொடர்புடைய இனமான ஈட்டர்பே எடுலிஸ் (Euterpe edulis) (ஜுகாரா) தற்போது நுங்கிற்காகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் எட்டு இனங்கள் பெலைஸிலிருந்து (Belize) தெற்கு நோக்கிப் பிரேசில் மற்றும் பெரு வரையான மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவை. குறிப்பாக இவை சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளப் பெருக்குச் சமவெளிகளில் வளர்கின்றன. அசாய்ப் பனைகள் 3 மீட்டர்கள் நீளம் வரையான இறகு வடிவ இலைகளுடன், 15 முதல் 30 மீட்டர்கள் வளரக்கூடிய உயரமான ஒல்லி பனைகள் ஆகும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அசாய் பனை, CC BY-SA 4.0.