பெருஞ்சீரகம்
Foeniculum vulgare · Fennel
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்பது (Fennel, Foeniculum vulgare) போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது அபியேசியே குடும்பத்தின் ஓர் அங்கமாக உள்ளது. இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் பூக்கள் மற்றும் இலைகள் கொண்ட தாவரம். இது மத்தியதரைக்கடல் பகுதிகளில் அதிகமாக உள்ளது, ஆனால் குறிப்பாக கடல் கடற்கரை அருகில் மற்றும் ஆற்றங்கரை உலர்ந்த மண் மீது வளரும் தன்மை கொண்டது. பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பெருஞ்சீரகம், CC BY-SA 4.0.