Plant Wiki

Plant Wiki › Swamp morning-glory

வள்ளல்

Ipomoea aquatica · Swamp morning-glory

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வள்ளல்
புகைப்படம்: Swamp morning-glory

வள்ளல் அல்லது கங்குன் அல்லது வள்ளல் கீரை (Ipomoea aquatica) என்பது அரை நீர்த் தாவரமும், வெப்ப வலய இலைக் காய்கறியும், மூலிகைத் தாவரமும் ஆகும். இது உலகிலுள்ள வெப்ப மண்டல பிரதேசங்களில் காணப்படும் இதன் தாயகம் அறியப்படவில்லை. வள்ளல் நீரில் அல்லது நீர் அதிகம் காணப்படும் நிலத்தில் வளரும். இதன் தண்டு 2–3 மீட்டர் (7–10 அடி) அல்லது அதற்கு மேல் வளரக்கூடியதும், முடிச்சுகளில் வேர் உருவாகக்கூடியதும், குழாய் போன்றதும், மிதக்கக்கூடியதும் ஆகும். பல வடிவங்களில் காணப்படும் இலை ஈட்டி முனை தோற்றத்தையும், 5–15 செ.மீ (2–6 அங்குலம்) நீளத்தையும் 2–8 செ.மீ (0.8–3 அங்குலம்) அகலத்தையும் கொண்டது. பூக்கள் எக்காள வடிவிலும், 3–5 செ.மீ (1–2 அங்குலம்) விட்டத்தையுடையதும், பொதுவாக வெள்ளையுடன் மத்தியில் வெளிறிய ஊதா நிறத்துடன் காணப்படும். இப்பூ வரைதலுக்கு பயன்படக்கூடிய விதையுறைகளை உருவாக்கக் கூடியது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை வள்ளல் (தாவரம்), CC BY-SA 4.0.