விழுதி
Litchi chinensis · Lychee
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
செங்கூழா அல்லது விழுதி அல்லது விளச்சி (lychee, Litchi chinensis) (எளிய சீனம்: 荔枝; பின்யின்: lì zhī) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை விழுதி, CC BY-SA 4.0.