Plant Wiki

Plant Wiki › Horsegram

கொள்ளு

Macrotyloma uniflorum · Horsegram

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia

கொள்ளு
புகைப்படம்: Horsegram

கொள்ளு/கொள் (Macrotyloma uniflorum) என்பது ஒருவகை பயறு வகையாகும். இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். கொங்கு நாடு மற்றும் தெற்கு கர்நாடகா மைசூர் பகுதி உணவு வகைகளில் கொள்ளுப் பருப்பு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 100 கிராம் கொள்ளுப் பருப்பில் 23 கிராம் புரதம் உள்ளது, இது அனைத்து பருப்பு வகைகளிலும் மிக அதிகம். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். இதன் சிறப்பை இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம். இதற்கு ஆங்கிலத்தில் ஆர்ச் க்ராம் என விளிப்பர். அதற்குக் காரணம் இப்பயறு பண்டுக் காலத்தில் குதிரைக்கு தீவணமாகக் கொடுத்து வந்தனர். இதற்கு மலையாளத்தில் மூதிரா எனவும் தெலுங்கில் உலாவாலு என வேறு பெயர்கள் இட்டு கூப்பிடுகின்றனர். இதைத் தவிர்த்து இந்தியில் குல்தி, அரபியில் அபுல் குல்த், சமஸ்கிருதத்தில் குளதா களை, சீன மொழியில் பியான் டௌ என உலகு முழுதும் அழைக்கின்றனர். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கொள்ளு, CC BY-SA 4.0.