ஆரக்கீரை
Marsilea · Waterclover
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஆரக்கீரை (அறிவியல் பெயர்:Marsilea), (ஆங்கிலப் பெயர்: water clover) என்ற இந்த தாவரம் பன்னம் என்ற வகையில் மார்சிலெசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும். இதன் இலை நுரையீரல் போல் தோற்றம் கொண்டது. இவ்வகைத் தாவரங்களில் ஆஸ்திரெலியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில் மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் தகவமைப்பைக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஆரக்கீரை, CC BY-SA 4.0.