Plant Wiki

Plant Wiki › Malabar Nutmeg

பத்திரி

Myristica malabarica · Malabar Nutmeg

பிற மொழிகள்: English

பத்திரி
புகைப்படம்: Malabar Nutmeg

பத்திரி, காட்டுச் சாதிக்காய் (MYRISTICA MALABARICA) இது மைரிச்டிசு (Myristicaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் தற்போதைய நிலையில் அழிவாய்ப்பு இனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது சாதிக்காய் போன்ற குணத்தைப் பெற்றுள்ளது. இதன் இலைகள் ஆயுர்வேதத்தில் வேதிச்சிகிச்சைக்கும் அழற்சி நீக்கியாகவும் பயன்படுகிறது. இதன் மரப்பட்டை பச்சை கலந்த கருப்பு நிறத்திலும், ஒருசில சிகப்பு நிறத்திலும் காணப்படுகிறது. இது 25 மீற்றர்கள் வரை வளருகிறது. இதன் பூர்வீகம் இந்தியாவில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியாகும். இவை பொதுவாக சதுப்பு நிலங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வளர்கின்றன.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பத்திரி, CC BY-SA 4.0.