Plant Wiki

Plant Wiki › Rice

ஒரைசா சட்டைவா

Oryza sativa · Rice

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஒரைசா சட்டைவா
புகைப்படம்: Rice

பொது வழக்கில் நெல் எனப்படும்Oryza sativa ஒருவகைப் புல் தாவர இனமாகும். இது ஆங்கிலத்தில் நெல் என்றே கூறப்படுகிறது. இது பொதுவாக உலக முழுவதும் பயிரிடப்படும் நெல் வகையாகும். இது வரலாற்றியலாக முதலில் பண்படுத்திய நெல்வகையாகும். இது சீன யாங்சி ஆற்றுப் படுகையில் 13,500 முதல் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு விளைவிக்கப்பட்டது. ஒரைசா சட்டைவா என்பது, பொவாசியே குடும்பத்தின் ஒரைசா பேரினத்தைச் சார்ந்ததாகும். இதன் மரபன்தொகை 12 குறுமவகங்களைக் கொண்டது; இதில் 430 Mbp அளவு மரபன்கள் உள்ளன. இது கூலத் தாவரவியலுக்கான வகைமை உயிரியாகும். இதை மரபன் திருத்தப் பயியாக மாற்றுவது எளிமையானது. ஒரைசா சட்டைவா என்பது இரண்டு வகைச் சிற்றினத்தைச் சேர்ந்ததாகும். அவை சிறிய விதை ஜப்பானிக்கா அல்லது சினிக்கா நெல்வகை, பெரிய விதை இண்டிகா நெல்வகை ஆகியனவாகும். ஜப்பானிக்கா வறட்சியான நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஆசியா முழுவதும் மூழ்கிய தாவரமாகவும் ஊடுபயிராகவும் இண்டிகா பயிரிடப்படுகிறது. அரிசி வெள்ளை, கருப்பு, பழுப்பு , சிறிதளவு கருவெள்ளை நிறத்தில் இருக்கும். அரிசியில் சவ்வரிசி ஒரு வகை ஆகும். மேலும் சில நெல் வகைகளாக இந்தோனேசியா கருப்பு நெல்லும், தாய்லாந்தின் மல்லிகை கருப்பு நெல்லும் உள்ளன. வெப்பமண்டலத்தில் இதன் மூன்றாவது வகைச் சிற்றினமும் பேரளவில் பயிரிடப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை ஒரைசா சட்டைவா, CC BY-SA 4.0.