Plant Wiki

Plant Wiki › Cubeb

வால்மிளகு

Piper cubeba · Cubeb

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

வால்மிளகு
புகைப்படம்: Cubeb

வால்மிளகு (தாவர வகைப்பாடு : Piper cubeba ) என்பது பைப்பர் கியூபெபா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட பிப்பரேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம் ஆகும். இது மரத்தில் படர்ந்து வளரும் பலபருவக் கொடித் தாவரமாகும். பசுமைமாறாக் கொடியாக ஆதாரத்தைப் பற்றி ஏறும் தாவரத்தின் கனிகள் மிளகை ஒத்திருப்பதோடு வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால்மிளகு என்னும் பெயர் பெற்றது. கிழக்கிந்திய பகுதி சுமாத்ரா, போர்னியோ, மலேயா ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படும் இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுப் பகுதிகளில் பயிர் செய்கின்றனர்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை வால்மிளகு, CC BY-SA 4.0.