Plant Wiki

Plant Wiki › Long pepper

திப்பிலி

Piper longum · Long pepper

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español

திப்பிலி
புகைப்படம்: Long pepper

திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும். ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும். திப்பிலி பல மிகச்சிறிய பழங்களைக் கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை (piper nigrum) போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான piperine காரப்போலியை (Alkaloid) கொண்டிருக்கும். திப்பிலியை ஒத்த இனமான piper retrofractum, ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது. அமெரிக்காவில் இருந்து தோன்றிய பேரினமான (Genus) capsicum–ம்மையும், இந்த திப்பிலிப் பழங்களையும் ஒப்பிட்டு பெரும்பாலும் குழம்பிவிடுவர்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை திப்பிலி, CC BY-SA 4.0.