Plant Wiki

Plant Wiki › Pea

பட்டாணி

Pisum sativum · Pea

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பட்டாணி
புகைப்படம்: Pea

பட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும். பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர். ஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது. உலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பனிக்காலம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை பட்டாணி, CC BY-SA 4.0.