Plant Wiki

Plant Wiki › Coleus rotundifolius

சிறுகிழங்கு

Plectranthus rotundifolius · Coleus rotundifolius

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிறுகிழங்கு
புகைப்படம்: Coleus rotundifolius

சிறுகிழங்கு, (ஆங்கிலம்: Coleus parviflorus அல்லது Plectranthus rotundifolius) லேபியேட்டே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது கேரளா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் கிழங்கு வகைப்பயிராகும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை,ஆப்ரிக்கா போன்ற வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படுகிறது. இது பலவகையான உணவுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் மணமும், சுவையும் நுகர்வோரைக் கவரக்கூடியது. இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால், சந்தையில் இதன் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கும். சிறுகிழங்கில் 14.7- 20.8% மாவுச்சத்தும், 0.04-0.31% புரதச்சத்தும், 0.57-0.96% சர்க்கரையும் உள்ளது. வடிக்கும் திறனுள்ள செந்தோமிலி மண் இச்சாகுபடிக்கு ஏற்றது. இப்பயிருக்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. ஈரப்பதமுள்ள சூழ்நிலை ஏற்றது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை சிறுகிழங்கு, CC BY-SA 4.0.