Plant Wiki

Plant Wiki › Guava

கொய்யா

Psidium · Guava

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

கொய்யா
புகைப்படம்: Guava

கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இது ஒரு குறுமரமாகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை கொய்யா (குடும்பம்), CC BY-SA 4.0.