Plant Wiki

Plant Wiki › Stinking corpse lily

இரஃப்லேசியா அர்னால்டி

Rafflesia arnoldi · Stinking corpse lily

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இரஃப்லேசியா அர்னால்டி
புகைப்படம்: Stinking corpse lily

இரஃப்லேசியா அர்னால்டி (Rafflesia arnoldii) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் அழுகிய மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது பிண மலர் (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது போர்னியோ பாங்குலு , சுமத்ரா தீவு, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும். டைட்டன் ஆரம், தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை இரஃப்லேசியா அர்னால்டி, CC BY-SA 4.0.