Plant Wiki

Plant Wiki › Wild petunia

உரூல்லியா

Ruellia · Wild petunia

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

உரூல்லியா
புகைப்படம்: Wild petunia

உரூல்லியா (தாவரவியல் வகைப்பாடு: Ruellia) என்பது பூக்கும் தாவர வகையின் கீழ் அமைந்துள்ள, தாவரப் பேரினங்களில் ஒன்றாகும். இது முண்மூலிகைக் குடும்பம் (Acanthaceae) என்ற தாவரக் குடும்பத்தின் 207 பேரினங்களில் ஒன்றாகும். இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Plum. ex L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினம், பன்னாட்டு அறிஞரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்ட தாவரப்பேரினம் ஆகும். இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, பூமியின் வெப்ப வலயம், அயன அயல் மண்டலம் பகுதிகள் முதல் வட அமெரிக்கா வரை உள்ளன. சீன் ரூல்லே (Jean Ruelle, 1474-1537), மூலிகை மருத்துவர், மருத்துவர் பிரான்சிசு I (Francis I of France) அரசருக்கு மருத்துவராக இருந்தவர்; Pedanius Dioscorides என்பதன், பல படைப்புகளை மொழிபெயர்த்தவர் ஆவார். அவரின் நினைவாகவே, இந்தப் பேரினத்திற்க்குப் பெயரிடப்பட்டது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை உரூல்லியா, CC BY-SA 4.0.