வெண் மருது
Terminalia arjuna · Arjun
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

வெண் மருது, ஆற்று மருது, நீர் மருது, அல்லது வெள்ளை மருது (Terminalia arjuna) என்பது டெர்மினாலியா பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது பொதுவாக ஆங்கிலத்தில் arjuna அல்லது arjun tree என்று அழைக்கப்படுகிறது. இது பாரம்பரிய மருத்துவ தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலை, பழம், விதை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. திருவிடைமருதூர், திருஇடையாறு ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது. வயலும் வயல் சார்ந்த நிலமான மருத திணைக்குரிய மரமாக வெண் மருது உள்ளது என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர் சிலர் அது பூமருது என்றும் கருதுகின்றனர்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை வெண் மருது, CC BY-SA 4.0.