Plant Wiki

Plant Wiki › Clockvines

துன்பேர்சியா

Thunbergia · Clockvines

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

துன்பேர்சியா
புகைப்படம்: Clockvines

துன்பேர்சீயா (தாவரவியல் வகைப்பாடு:Thunbergia) என்பது முண்மூலிகைக் குடும்பத்தினைச் சார்ந்த பூக்கும் தாவரங்களின் ஒரு பேரினமாகும். இது சகாரா கீழமை ஆப்பிரிக்கா, மடகாசுகர், தெற்கு ஆசியா, நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் காணப்படும். இப்பேரினத்தில் 150 சிற்றினங்கள் உள்ளன. துன்பேர்சியா பேரினங்கள் வருடாந்திர அல்லது வற்றாத கொடிகள் வகையாகும். இது புதர் போல 2-8 மீ உயரம் வரை வளரும் இயல்புடையது. இப்பேரினத்தின் பெயர் சுவீடன் இயற்கை ஆர்வலர் கார்ல் பீட்டர் துன்பெர்க் (1743-1828) நினைவுபடுத்துகிறது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை துன்பேர்சியா, CC BY-SA 4.0.