சுண்டெலிக் கூண்டு
Utricularia · Bladderworts
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

சுண்டெலிக் கூண்டு அல்லது முட்டைப்பாசி (Utricularia; Biovularia, யுட்ரிகுலோரியா; பயோவுலேரியா) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது லண்டிபுளோரேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடிகளில் பூச்சிகளைப் பிடிப்பதற்குச் சுண்டெலிக் கூண்டு போன்ற பொறிகள் உள்ளன. யுட்ரிகுலோரியா மிகச் சிறிய செடியாகும். இச்செடிகள் உலகம் முழுதும் சுமார் 200 வகைகளாகக் காணப்படுகிறாது. இந்தியாவில் மட்டும் 34 வகைகளும், தமிழ் நாட்டில் 17 வகைச் செடிகளும் உள்ளன.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை சுண்டெலிக் கூண்டு, CC BY-SA 4.0.