Plant Wiki

Plant Wiki › Mistletoe

குருவிச்சை

Viscum · Mistletoe

பிற மொழிகள்: English · 中文 · Español

குருவிச்சை
புகைப்படம்: Mistletoe

குருவிச்சை 70-100 இனத்தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். இது சாந்தாலேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். குருவிச்சை அயன மண்டல மற்றும் குளிர் வலயத்தில் வளரக் கூடியது. இவை வைரமான தண்டையுடைய அமையத்துக்குரிய குறை ஒட்டுண்ணித் தாவரமாகும். கிளைகள் 15–80 சதம மீட்டர் (5.9–31 அங்குலம்) நீளமுடையது. இவை வைரமான தண்டையுடைய தாவரங்களையே விருந்து வழங்கியாகக் கொள்ளும். இவை இணைக் கிளையுள்ள முறையில் கிளைவிடும் பச்சை இலையுடைய தாவரமாகும். விருந்து வழங்கியில் இருந்து நீரையும் கனியுப்புகளையும் உறிஞ்சி ஒளித்தொகுப்பு செய்யக் கூடியது.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை குருவிச்சை, CC BY-SA 4.0.