அல்லியம்
Allium · Onion
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அல்லியம் (தாவரவியல் பெயர்: Allium) என்பது ஒருவித்திலை பிரிவைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இப்பேரினத்தில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, வெங்காயத்தாள், சின்ன வெங்காயம், இலீக்சு, இனப்பூண்டு ஆகிய பயிர்செய்கைத் தாவரங்களும் அடங்கியுள்ளன. இப்பேரினப் பெயர், பூண்டுக்குரிய (Allium ), இலத்தீனியப் பெயராகும். இதனின் மாதிரி இனங்களில் உள்ள பேரினமான வெள்ளைப்பூண்டு (Allium sativum) என்பதற்கு பயிர்செய்கைப் பூண்டு ("cultivated garlic") என்பது பொருளாகும். 1753 ஆம் ஆண்டு. கரோலஸ் லின்னேயஸ், இப்பேரினத்தைக் குறித்து முதன்முதலாக விவரித்தார்.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை அல்லியம், CC BY-SA 4.0.