பிராசிகா இராபா
Brassica rapa · Field mustard
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பிராசிகா இராபா (தாவரவியல் பெயர்: Brassica rapa ) என்பது பூக்கும் தாவரங்களில் ஒன்றாகும். இதன் தாவரக்குடும்பம் கடுகுக் குடும்பம் (Brassicaceae) ஆகும். இதன் பேரினம், பிராசிகா என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினத்தில் 42 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு இனமான இத்தாவரத்தில் பல உள் இனங்களின் வகைகள், தாவரவியல், மரபியல் நுட்பங்களால் உருவாக்கப் பட்டுள்ளன. அவைகள் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இதன் இலைகள், காய்கறியாகப் பயன்படுகின்றன. இந்த இனத்தினை, 1753 ஆம் ஆண்டு முதன்முதலாகக் கண்டறிந்தவர் கார்ல் லின்னேயசு ஆவார். பன்னாட்டு தாவரவியல் பெயர் சுருக்க முறைமையில் L. என்று குறிப்பர். இந்த இனத்திற்கு 251 வேறு பெயர்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை பிராசிகா இராபா, CC BY-SA 4.0.