கினோவா
Chenopodium quinoa · Quinoa
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கினோவா (quinoa) (செனோபோடியம் கினோவா; or , from Quechua kinwa or kinuwa) நாயுருவி (அமரந்தேசியே) குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். கினோவா புல்வகைத் தாவரமன்று; இது ஒரு போலி கூலவகையாகும். இது புதினா, நாயுருவி (அமரந்து) வகைத் தாவரங்களோடு உறவுடையதாகும். இது, அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காகப் பயிரிடப்படும் ஆண்டுச் செடிவகையாகும்; இந்த விதைகளில் மற்ற கூலங்களை விட கூடுதலான புரதமும் நார்ப்பொருளும் பி உயிர்ச்சத்துகளும் கனிமச் சத்துகளும் உள்ளன. வடமேற்குத் தென் அமெரிக்காவில் ஆண்டிசு மலைத் தொடரில் தோன்றியுள்ளது. இது முன்பு கால்நடைத் தீவனமாக 5200–7000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்டுள்ளது. இது 3000-4000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மாந்தரின் உணவாக பொலீவியாவில் உள்ள பெரு படுகையின் தித்திகாக்கா ஏரியில் பயன்பட்டுள்ளது. இன்று, ஆண்டியன் பகுதி கினோவா பயிர் விளைச்சல் பெரும்பாலும் சிறிய பண்ணைகளாலும் கழகங்களாலும் செய்யப்படுகிறது. கினோவா பயிர்விளைச்சல் கென்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மேலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 70 நாடுகளில் செய்யப்படுகிறது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கினோவா நுகர்வு கூடியுள்ளதால், கினோவா விலை 2006 இல் இருந்து 2013 க்குள் மும்மடங்கு ஏறியுள்ளது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை கினோவா, CC BY-SA 4.0.