செம்பனை
Elaeis · Oil palm
பிற மொழிகள்: English · 日本語 · Bahasa Indonesia · Español

செம்பனை (Oil Palm) என்பது ஒரு வகை பனை மரம் ஆகும். தென்னையைப் போன்ற இந்த மரம், பாமாயில் பனை என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் செம்பனை என்றும் கெலாப்பா சாவிட் என்றும் அழைக்கின்றனர். இரு வகையான செம்பனை மரங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவின் செம்பனை எலியிஸ் குயினென்சிஸ் (Elaeis quineensis) என்கிற இனத்தைச் சேர்ந்தது. மற்றொன்று அமெரிக்க செம்பனை. இந்த இனம் எலியிஸ் ஒலிபெரா (Elaesis oleifera) என்கிற இனத்தைச் சேர்ந்தது. இவற்றைத் தவிர அத்லியா மாரிபா (Attalea maripa) என்கிற செம்பனை வகையும் உள்ளது. இந்த வகை செம்பனை மலேசியாவில் அதிகமாகப் பயிரிடப் படுகிறது. மாரிபா பனை மரம் சிவந்த நிறத்தைக் கொண்ட பனை பழங்களை உருவாக்குகிறது.
ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி
உரை: விக்கிப்பீடியா கட்டுரை செம்பனை, CC BY-SA 4.0.