Plant Wiki

Plant Wiki › Indian mulberry

வெண்நுணா

Morinda citrifolia · Indian mulberry

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வெண்நுணா
புகைப்படம்: Indian mulberry

வெண் நுணா அல்லது நோனி அல்லது இந்திய மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தென்கிழக்கு நாடுகளான ஹவாய், ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற நாடுகளில் அதிகம் விளைந்து ஏற்றுமதியாகிறது. அடர் பச்சை இலைகளுடன் 30 அடி உயரம் வளரும் இது பூக்கும் தாவரமாகும். இதன் பூக்களை மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, மேலும் இப்பூக்களில் தேன் நிறைந்து காணப்படுகிறது. ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளர்கிறது. பசிபிக் தீவு நாடுகளில் மக்கள் இதனை உணவாகவும் உண்கிறார்கள். புற்று நோய்க்கு பெருமருந்தாகவும் பயன்படுகிறது. இந்த மரம் தமிழ் நாட்டின் பூர்வீக மரமான மஞ்சனத்தி மரத்தின் வகையைச்சேர்ந்தது ஆகும். வெண் நுணாவை தென்கிழக்காசிய மொழிகள் சிலவற்றில், குறிப்பாக ஓசியானிய மொழிகள் சிலவற்றில் நோனி என அழைக்கின்றனர். வெண் நுணாப் பழத்தின் சாறெடுத்து அதற்கு வேறு சுவையூட்டி, சில நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அது இந்தோனேசியாவில் சில வணிகப் பெயர்களில் காணப்படுகிறது. ஆயினும் அவர்கள் கூறும் மருத்துவ குணங்கள் வெண் நுணாவுக்கு மட்டும் சிறப்பானவையென நிறுவப்படவில்லை.

ஆங்கிலத்தில் முழுப் பக்கம்: பராமரிப்பு, பாதுகாப்பு, 3D மாதிரி

உரை: விக்கிப்பீடியா கட்டுரை வெண்நுணா, CC BY-SA 4.0.